தாணுவிற்கு இரவு சாப்பாட்டிற்கு இப்போது எல்லாம் இட்லி தோசை பிடிப்பதில்லை... அவனுக்கு 'பெட் டோஸ்ட்' தான் வேண்டும்... அவன் அம்மா இப்போது எல்லாம் காஞ்சி பேக்கரிக்கு சென்றால், கேட்காமலே பிரட் பக்கெட்டை எடுத்து தந்து விடுகிறானாம். இவன் எல்லாம் அமெரிக்கவிலோ லண்டனிலோ பிறந்து இருக்க வேண்டியவன் என்பது அவன் அம்மாவின் கருத்து.
ஆம்மாம் நம்ம வீட்டுல தான் ஒரு வெள்ளைக்கார தொரை இருக்கிறான் என்று பேகேரிகாரன்க்கு தெரியும் போல... என்று அவளிடம் சொன்னேன்...
நேற்று இரவு அவன் பிரட் டோஸ்ட் சாப்பிட்டு கொண்டு இருந்த பொது, எங்க வீடு தொரை கிட்ட சுதந்திரம் கேட்கலாம் என்று நினைத்து கேட்க ஆரம்பித்தேன்.
"தம்பி, சுதந்திரம் தா..."
"தடமாட்டேன்..." கையை வேறு பின்னல் வைத்துகொண்டான்...
"சொஞ்சம் சுதந்திரம் தா கண்ணு..."
"தடமாட்டேன்..."
நிச்சயமாக இவன் வெள்ளைக்கரனாக தான் பிறந்து இருக்க வேண்டும் என்று நினைத்து மேலும் தொடர்ந்தேன்...
"தம்பி..."
"என்ன..."
"Quit India..."
"மாட்டேன்..." மேலும் உறுதியானது...
"சரி... எப்போ சுதந்திரம் தருவே?..."
"நாளைக்கு கீச்சுக்கு போகும் பொது தான் தடுவென்..."
"அப்படியா.."
"அமாம் அப்படித்தான்..."
"சரி..."
பிறகு வேற வேலைகளை கவனிக்க தொடங்கினேன்...
சிறிது நேரத்திற்கு பிறகு, சேரில் உட்கார்ந்துகொண்டு தீவிரமாக எதோ யோசனை செய்து கொண்டு இருந்தேன்...
அது அவனுக்கு நான் வருத்த பட்டு கொண்டு இருந்ததை போல் தோன்றி இருக்க வேண்டும்...
மெல்ல என் அருகில் வந்தவன்,
"அப்பா..."
"என்ன..."
"சுந்தம் வேணுமா..."
"அமாம்..."
"இந்த வச்சுக்கோ..." என்று சொல்லி நான் அவனிடம் சுதந்திரம் கேட்ட பொழுது அவன் கையில் வைத்திருந்த பொம்மையை கொடுத்தான்...
- எஸ் பி ஜி ஆர்