Sunday, June 13, 2010

அவன் ஏன் அப்படி பண்ணுனான்...

"தெரியும் இல்ல, அவன் பொண்ணு பார்த்துட்டான்..."
"எப்போ..."
"முந்தாநேத்து..."
"அவங்க வீட்டுக்கு தெரியுமா..."
"இல்ல... அவன் மட்டும் போய் பார்த்துட்டு ஓகே சொல்லிட்டான்..."
எங்கள் அலுவலகத்தில் முகேஷ்க்கும், வினீத்க்கும் இடையே நடந்த உரையாடல் இது...
கம்ப்யூட்டர் ல இருந்து கவனம் சிதறியதால், உரையாடலை தொடர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.
"பையன் வீட்டுல இருந்து ஏன் யாருமே போகலை?"
"அதன் தெரியும் இல்ல போன வாரத்திலே இருந்து, அவன் அவங்க அப்பா அம்மா பேச்சை கேட்கறது இல்லை..."
"அதுக்காக பொண்ணு பார்க்க போகும் போது தனியாவா போறது?..."
"போன வாரம் என்ன பண்ணுனான் தெரியுமா..." பிஜுவும் சேர்ந்து கொண்டான்.
"என்னடா பண்ணுனான்?..."
"அவன் பிரண்ட மட்டும் கூட்டிகிட்டு ஒரு பொண்ண பார்க்க போனான்..."
அவர்கள் குறிப்பிடும் பையன் யாராக இருக்கும் என்று நான் யோசிக்க ஆரம்பித்தேன்...
"சரிடா... இப்போ என்ன அகும்ற..."
"தெரியலடா.... இன்னகினு வேற productionல கரெக்டா போன அப்புறம் தான் கேளம்பனும்னு மேனேஜர் சொல்லிடாரு..."
"முடிஞ்சுது... அப்போ... இன்னைக்கு நைட் இங்கதான்ன்னு சொல்லு..."
"ஆமாம் டா... வயிப்ஆ பார்க்க சொல்லிருக்கேன்... இன்னைக்கு தெரிஞ்சிடும், அவன் ஏன் இப்படி செய்யுறன்னு..."

தலையில் அடித்து கொண்டேன்... திருமணதிற்கு பிறகு பசங்களும் இப்படி டிவி சீரியல் பார்பாங்கனு இன்னைக்கு தான் தெரிஞ்சிகிட்டேன்...
பெண்கள் மாதிரியே... அத பத்தி ஆபீஸ்லயும் டிஸ்கசண் வேற...
என்னோட half an hour போச்சு... நல்ல இருங்காப்பா ...

- எஸ் பி ஜி ஆர்.

2 comments:

Your comments are Welcome... Comments can be added Anonymously and will be Visible after Moderation...