Sunday, April 18, 2010

தாணுவின் முதல் திரைப்படம்...

வேற ஒன்னும் இல்லை, எங்க இரண்டு வயது குட்டி தாணு முதல் முதலா சினிமா தியேட்டர்ல படம் பார்த்த அனுபவத்தை பற்றி ஒரு போஸ்ட் போடனும்னு நினைச்சேன். இப்போ தன டைம் கிடைச்சுது.
ரொம்ப நாளாவே நானும் அவங்க அம்மாவும் அவன தியேட்டர்க்கு தூக்கிட்டு போகணும்னு நினைச்சோம். அதுவும் அவன் டிவில வர பாட்டுக்கு எல்லாம் குதிச்சு குதிச்சு டான்ஸ் ஆடுவதை பார்க்கும் போது சிக்கிரமா கூட்டிட்டு போகணும்னு நினைச்சோம். அந்த சமயத்துல தான் வேட்டைக்காரன் வந்துச்சு, போகலாம்னு நினைச்சோம். ஆனா அந்த படத்த பார்த்தவங்க சொன்ன விமர்சனத்த கேட்ட பிறகு அந்த ஐடியாவ கை விட்டுடோம். பின்ன, நாளைக்கு அவன் வளர்ந்து "போயும் போயும் முதல் முதலா அந்த படதுக்கு போய் என்ன கூட்டிட்டு போய்டீங்களே" என்று சொன்ன நாங்க எங்க போய் முட்டிகறது?
ஒரு சண்டே அன்னைக்கு இன்னைக்கு கண்டிப்பா படத்திற்கு செல்வது என்று முடிவு எடுத்தோம். அன்னைக்கு குட்டி வேற கொஞ்சம் மூட் அவுட்ல இருந்தான். பொறந்த அன்னைக்கு அவன அவங்க அம்மா கிட்ட படுக்க வச்சப்போ கூட கொஞ்சம் மூட் அவுட்ல இருந்த மாதிரி தான் இருந்தான். அதுக்கு முன்னாடி மதியம் அவங்க சித்தி கிட்ட இருந்த போது கொஞ்சம் நார்மலா இருந்த மாதிரி இருந்தான். அந்த விஷயத்திற்கு அப்புறம் வரேன். கிளம்ப ஆரம்பிச்சோம். சங்கம் தியேட்டர்ல எதோ ஒரு படத்திற்கு போகலாம் என்று முடிவு செய்து வண்டிய எடுத்தேன். அங்கே போனால் "கண்டேன் காதலை" படம் தான் பார்க்கிற மாதிரி இருந்துச்சு. இன்னும் ஒண்ணுல வேட்டைக்காரன் ஓடிட்டு இருந்துச்சு. அதுக்கு போகலாம்னு என் மனசுல ஒரு ஓரத்துல தோனுச்சு. ஆனா தம்மன்னவ போஸ்டர்ல பார்த்ததும் மனசு மர்றி "கண்டேன் காதலை" பார்க்கலாம்னு டிக்கெட் வாங்கினேன். இந்த படம் ஹிந்தில சூப்பரா இருக்கும் அப்படின்னு என் மனைவி கிட்ட சொல்லி, பெர்மிச்சியன் வாங்கிட்டேன். (பின்ன, தம்மன்ன இருக்கா, அதுனால இந்த படத்துக்கு போகலாம்ன சொல்ல முடியும்???... ஏற்கனவே எங்க வீடு பூரி கட்டை வாங்குனப்ப இருந்ததுல பாதி சைஸ் தான் இப்போ இருக்கு... அது எப்படி தேஞ்சு போச்சுன்னு நான் வேற தனியா சொல்லனுமா???... :-)... )
கொஞ்சம் திரில்ல இருந்தது... தாணுவுக்கு போஸ்டர் எல்லாம் காட்டுனோம்... அவனும் ஒரு மாதிரி சந்தோஷ மூடுக்கு வந்துட்டான்... சினிமா ஹால்க்கு உள்ளே போனோம்... போய் எங்க சீட்டுல உட்கார்ந்தோம்... கொஞ்ச நேரத்துல படம் போடா போறாங்க... தம்பி எப்படி exite ஆகா போறான்னு பார்க்க நாங்களும் ஆர்வமா இருந்தோம்...
அவன நான் என் மடில வச்சு இருந்ததாலே கொஞ்சம் இடிசுக்கோ புடிசுக்கோ என்று தான் உங்கர்ந்திருந்தோம்... அவனும் கொஞ்சம் நெளிஞ்சு கிட்டே இருந்தான்...
பெல் அடிச்சது...
லைட் எல்லாம் ஆப் பண்ணினாங்க...
"அப்பா... கண்டு போய்ச்சு... அப்பா.... கண்டு போய்ச்சு...", என்று சொல்லி என் தோல் மீது சாய ஆரம்பித்தான்... பின் வரிசையில் மெல்லிய சிரிப்பு சத்தம் கேட்டது... சென்சர் சர்டிபிகட் போட்டு, டைட்டில் போட்டு முடிக்கும் போது தாணு குட்டி தூங்க ஆரம்பித்து இருந்தான்... நான் கொஞ்ச நேரம், அவங்க அம்மா கொஞ்ச நேரம்னு turn போட்டு அவன வச்சுஇருந்தோம்... சரியா இண்டர்வலுக்கு முழிச்சு, பிறகு படம் போட்டதும் மீண்டும் தூங்கினான்...
எப்படியோ எங்க குட்டி தாணு தியேட்டர்ல படம் பார்த்துட்டான்...
- எஸ் பி ஜி ஆர்.

2 comments:

  1. என் சிஸ்டர் பையனை கூட்டிகிட்டு சினிமா போய்.. அவன் அழ.. ரெண்டு பேரும் என்னை ‘நீ அப்புறம் படம் பார்த்துக்க’ன்னு பையனோட வெளியே அனுப்பின சம்பவம் நினைவுல வந்திச்சு..

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி ரிஷபன்.
    [[["‘நீ அப்புறம் படம் பார்த்துக்க’ன்னு பையனோட வெளியே அனுப்பின சம்பவம் நினைவுல வந்திச்சு..".]]]
    ஆனா நாங்க எப்படியோ படத்தை பார்த்திட்டோம்... :-)...

    ReplyDelete

Your comments are Welcome... Comments can be added Anonymously and will be Visible after Moderation...