நான் கல்லூரியில் படித்தபோது அப்படித்தான் இதே போல ஒரு சூழ்நிலை உருவானது. எங்கே போனாலும் ஒரு குறிப்பிட்ட படத்தின் பாடல்கள் ஒலித்து கொண்டு இருக்கும்... மாணவர்கள், மாணவிகள், ஆண்கள், பெண்கள், அனைவரும் அதே படத்தின் பாடல்களை ஹம் செய்து கொண்டு இருப்பார்கள்... பிறகு தெரிந்து கொண்டேன் விஜய் மற்றும் ஷாலினி நடித்து "காதலுக்கு மரியாதை" என்று ஒரு படம் வந்து இருக்கிறது என்றும், அது அனைவரையும் ஒரு ஆட்டு ஆட்டிஇருக்கிறது என்று. ஆனால் அப்போது எனக்கு படம் பார்ப்பது ஒரு பிடிக்காத விஷயம் என்பதால் அந்த படத்தை பார்க்கவில்லை, இன்று வரை...
பிறகு வாழ்க்கை மாறியது. என் நண்பிக்கு படம் பார்ப்பது பிடிக்கும் அல்லது குறைந்த பட்சம், படத்தின் கதையை மட்டும் ஆவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால், நானும் கொஞ்சம் கொஞ்சமாக படம் பார்க்க ஆரம்பித்தேன். ஒரு சமயத்தில் என்னால் விசு படம் கூட பார்க்க முடிந்தது :-). ஆனால் கால ஓட்டத்தில் மீண்டும் நான் என் பழைய சுபாவதிற்கே வந்து விட்டேன்.
பல வருடம் கழித்து இப்பொழுது மீண்டும் எங்கே சென்றாலும் ஒரு படத்தின் பாடல்கள் கேட்கிறது, எந்த சேனல் மாற்றினாலும் அந்த படத்தின் பாடல்கள்... ஹ்ம்ம்... "விண்ணை தாண்டி வருவாயா" என்ற படம் வந்து இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன். முதலில் படம் பார்க்கும் ஆர்வமே இல்லை. ஆனால் ஒரு நாள் என் ஜிம் மாஸ்டர் "த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண பார்த்து காதலிக்கணும்" என்று சொன்ன வுடன் அந்த படம் பார்ப்பது என்று முடிவெடுத்தேன்.
ஒரு சுபயோக சுபதினத்தில் படத்தையும் பார்த்தேன்... சிம்பு ஒரே கேள்வியை படம் முழுவதும் கேட்டு கொண்டே இருக்கிறார். ஹ்ம்ம்... ஆனால் அதற்கு பதில் சொல்ல தான் படத்திலும் சரி, வெளியிலும் சரி, ஆளே இல்லை... இந்த கேள்விய அவர் கேட்கும் போது சிலர் கண் கலங்குவதையும் பார்த்தேன்... பாவம்... பதில் தெரியலைன்னா பரவாஇல்லை, அதற்காக அழ கூடாது...
ஆனால், எனக்கு பதில் தெரிந்து விட்டது... அதை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் என்ற கடமை எனக்கு இருப்பதாக எண்ணியதால் இந்த பதிவு... :-)
எந்த ஆணுக்கும் எந்த பெண்ணை பார்த்தாலும் ஏற்படுகிற ஒரு pull, சிம்பு விற்கு த்ரிஷா மேல் ஏற்படுகிறது. மேலும் அவர் கலை கண்ணோடு(???) பார்ப்பதால் அந்த pull இன்னும் கொஞ்சம் அதிகமாவே ஏற்படுகிறது. அது ஏன் என்ற கேள்வியை அவர் மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டே இருக்கிறார். தம்பி, இதுக்கு எல்லாம் கேள்வி கேட்க கூடாது. அப்படி கேட்டால் ஆப்பிள் ஏன் மரத்தில் இருந்து கீழே விழுது? இரவுக்கு பின் ஏன் விடிகிறது? நாம் ஏன் சாப்பிட வேண்டும்? நாம் ஏன் தூங்க வேண்டும்? என்று கேட்டு கொண்டே இருக்கவேண்டியது தான். அது அப்படித்தான். உலகம் அப்படித்தான் வடிவமைக்க பட்டு இருக்கிறது. Thats how the world is designed. சரியா தவறா என்று கேள்வி கேட்டு கொண்டு இருக்க முடியாது. இந்த டிசைன் பால்ட்(design fault) இக்கு ஒரு காரணம் இருக்க வேண்டும் என்றால், அது மனித இனத்தை நெடு நாள் இந்த பூமியில் வைத்து இருக்க வேண்டும் என்ற ஒரே காரணம் தான் இருக்க முடியும். பதில் கிடைத்ததா தம்பி.
ஹ்ம்ம்... இல்லையா... ஏன் இத்தனை பெண்கள் இருக்கும் பொது நீ ஜெஸ்ஸி யா மட்டும் ஏன் காதல் செய்தாய் என்று புரியலையா???... அப்படி கேளு தம்பி... அதற்கு ஒரே ஒரு பதில் தான் இருக்கு... நக்கீரன் அண்ணாச்சி நித்யா பற்றி சொன்ன மாதிரி சொல்லணும்னா "அவன் ரசனை படு மட்டம்யா..." போதுமா... நீ இத்தனை பெண்கள் இருக்கும் பொது நீ ஜெஸ்ஸி யா மட்டும் காதலிச்சது உன் மட்டமான ரசனைய காட்டுது... சில பாட்டுல உன் கூட ஆடுனுவங்க கூட அவளை விட நல்லா இருந்தாங்க... நீ திரும்பி பார்க்கலையா???
படம் முடிஞ்சதும் என் நண்பன் சொன்னான், "ஹ்ம்ம்... பல்பு வாங்குன கதைய படமா எடுத்தா இப்போ எல்லாம் பிச்சிகிட்டு ஓடுது..."
மேலும் அவனே சொன்னான் "நல்ல வேளை நான் டைரக்டரா இல்ல... இல்லேன்னா நான் வாங்குன பல்புக்கு எல்லாம் எத்தனை படம் எடுக்கறது..."
- எஸ் பி ஜி ஆர். .